பிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்..!


பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும், தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இயக்குனர், நடிகர் அனுராக் காஷ்யப் மகள் ஆலியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படத்தை பதிவு செய்து இருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததோடு மோசமான கமெண்ட்ஸ்களும் பதிவாகின. இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் அவருக்கு பாலியல் மிரட்டல்களும் விடுத்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்.

இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஆலியா கூறியபோது ’கடந்த சில நாட்களாக நான் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளேன்.

என்னுடைய பிகினி புகைப்படத்தை பார்த்த பலர் மோசமான மற்றும் அருவருப்பான கமெண்ட்டுகளை பதிவு செய்தனர். 

ஒரு கட்டத்தில் நான் அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் அதன்பிறகு அவதூறான கருத்துக்களை புறக்கணிக்க முடிவு செய்தேன். இது பற்றி நாம் நிறைய விவாதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஒருவரின் மகளுக்கே பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments: