யாழில் கொரோனா தொற்று: 487 குடும்பங்களை சேர்ந்த 955 பேர் சுய தனிமைப்படுத்தலில் !


யாழ்.மாவட்டத்தில் தற்போது 955 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், மாவட்டத்தில் இதுவரை 232 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொற்று உறுதியானோரில் 190 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

இதேவேளை நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 487 குடும்பங்களை சேர்ந்த 955 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு சில நாட்களாக யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காவலைக்குரியது என குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிலைமையை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

No comments: