கொரோனா தொற்று :30 வயதிற்கு குறைந்த இருவர் உட்பட மேலும் 41 பேர் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்றினால் 30 வயதிற்கு குறைந்த இருவர் உட்பட மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,985 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 பெண்களும் 24 ஆண்களும் உள்ளடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று இதுவரை 1,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 54 ஆயிரத்து 828 அதிகரித்துள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,251 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 21 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது.

No comments: