மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இளங்களுக்கு வருவதற்கு தடை


கொரோனா தொற்று நிலையைக் கருத்திற் கொண்டு, ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்படுள்ளது.


எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்றும் அதற்கான அனுமதியை கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி குறித்த நாடுகளில் இருந்து வருவதற்கும், 14 நாட்களுக்குள் அந்த நாடுகளுக்கு சென்றவர்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனினும், குறித்த ஆறு நாடுகள் ஊடாக இடைமாறும் பயணிகளுக்கு நாட்டுக்கு வருகை தர அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பயணத் தடை, எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல், நாட்டுக்கு வருகை தரும் 08 ஆபிரிக்க நாடுகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக  சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நேற்று தெரிவித்திருந்தது.

No comments: