அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் / ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்


குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (28) அறிவிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மார்ச் 10 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: