தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்: ஒருவரிடத்தில் இதுவரை 117 பேர் கைது


ஒரு வருடத்திற்கு முன்னர் ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் 15 இளைஞர்களும் 79 முதியவர்களும் அடங்குவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வன்முறையுடன் கூடிய பல மாதங்களாக இடம்பெற்ற ஜனநாயக சார்பு போராட்டங்களைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டில் முன்னாள் பிரிட்டிஷ் காலனியில் இருந்து சீன ஆட்சிக்கு திரும்பிய ஜூலை 1 ஆண்டு நிறைவுக்கு முன்னதாக ஜூன் 30 ஆம் திகதி சீனாவினால் குறித்த பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தபட்டது.


குறித்த சட்டம் கருத்து வேறுபாடுகளை நசுக்க பயன்படுத்தப்பட்டதாக மேற்கத்திய நாடுகளும் மனித உரிமைகள் குழுக்கள் உட்பட பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

No comments: