2021 க.பொ.த. உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் இடம்பெறுமா ? கல்வி அமைச்சு


கொரோனா தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் 2021 க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலைமை தொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பாக  தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நிலைமை காரணமாக 2020 க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சாதாரணதர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பாக நாளை (புதன்கிழமை) மாகாணகல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, 2020 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: