நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது!!


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், இந்த நேரத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யக்கூடாது என்பதே அனைவரின் முடிவு என கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்கும் வகையில் அவற்றினை இறக்குமதி செய்வதற்கான முடிவு சபாநாயகரால் எடுக்கப்பட்டது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

No comments: