ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கு : குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை


ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட  முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகளும், 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மினியா பொலிஸ் நகர வீதியில் டெரெக் சுவாவின் என்ற பொலிஸ் அதிகாரி, கழுத்தில் 9 நிமிடங்கள் முழந்தாளிட்டு அழுத்தியமையால் ஜோர்ஜ் ப்ளொய்ட் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, நிறவெறிக்கு எதிராகவும், பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்ப்புகள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, டெரெக் சுவாவின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் ப்ளொய்டின் குடும்பத்தினரும், அவரின் ஆதரவாளர்களும் இந்தத் தண்டனையை வரவேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: