24 வயதுடைய இளைஞன் உட்பட இருவர் யாழில் கொரோனாவால் உயிரிழப்பு


யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 926 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,862 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: