ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணி - இறுதி T-20 போட்டி இன்று


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சதம்டனில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, 2 - 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணியும் இன்று களமிறங்கவுள்ளன.

No comments: