முதல் டோஸ் தடுப்பூசி டெல்டாவுக்கு எதிராக 33% மட்டுமே பயனளிக்கும் - ஆய்வுகள்


டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியினதும் முதலாவது டோஸ் 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இது பாதுகாப்பானது அல்ல என்றும் இது டெல்டா வகையின் மிகப்பெரிய பிரச்சினை என்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


ஆகவே தடுப்பூசியின் முதலாவது டோஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாப்பை வழங்குவதற்குகான சாத்தியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் B117 அல்பா வைரஸ் மாறுபாட்டிற்கு சாதகமான பதிலைக் காட்டுவதாக சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

No comments: