கொரோனா தொற்று உறுதியான மேலும் 45 பேர் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,814 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த இறப்புக்கள் நேற்று 23 ஆம் திகதி உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் இறந்தவர்களில் 18 பெண்கள் மற்றும் 27 ஆண்கள் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 10 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 34 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

No comments: