துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம்


மரணதண்டனை கைதி துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டித்துள்ளது.

சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு, தன்னிச்சையான நடவடிக்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் அதேவேளை பொறுப்புக்கூறலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments: