துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு : அமெரிக்கா விசனம்


மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட துமிந்த சில்வா பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்றும் விமர்சித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவமான நீதி ஆகியவை உறுதி செய்யப்படுவது அவசியம் என்றும் அலைனா டெப்லிட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: