Tuesday, June 15, 2021

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 780 மில்லியன் நிதியுதவி


இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளது.

இந்த நிதியுதவி கடன் தொகை அல்ல எனவும் நிதியத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு நிதி கிடைக்கவுள்ளதாகவும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர குறிப்பிட்டார்.

இந்த நிதி எதிர்வரும் ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த கடனைப் பெறுவதற்கான எவ்வித கோரிக்கையும் சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் முன்வைக்கவில்லை எனவும் சந்திரநாத் அமரசேகர குறிப்பிட்டார்.