அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக்க ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சில அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் திரவ எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் விநியோக சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் ஆக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.No comments: