இதுவரை 2,361 பேருக்கு தொற்று உறுதி - அனைத்தும் புத்தாண்டு கொத்தணி

நாட்டில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையை 233,053 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இன்று (17) இதுவரை 2,361 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவை அனைத்து புத்தாண்டு  கொத்தணியுடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 35,245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,289 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையை 195,434 ஆக அதிகரித்துள்ளது.

No comments: