21 அன்று கட்டுப்பாடுகள் நீக்கம் - இருப்பினும் சில கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்!!! - முழு விபரம்

 

அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்கப்பட்டு பின்னர் 23 அன்று மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணத்தடை25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீடிக்கும் என்றும் பொது மக்கள் ஒன்றுகூட அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.

இதற்கிடையில் பொதுக் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் எந்தவொரு நிகழ்வுகளும் அந்த காலகட்டத்தில் அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இருப்பினும் மதுபான நிலையங்களை திறப்பது குறித்து கொரோனா கட்டுப்பட்டு நிலையம் முடிவு எட்டப்படவில்லை என எமது செய்திசேவையினால் அறிய முடிகின்றது.

No comments: