போராட்டத்தில் ஈடுபட்டால் பொது மன்னிப்பு வழங்கும் பரிந்துரையில் இருந்து நீக்கம் - சிறைச்சாலைகள் திணைக்களம்


போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் பெயரை பொதுமன்னிப்பிற்காக பரிந்துரைப்பதைத் தவிர்ப்பதற்கான முடிவை சிறைச்சாலைகள் திணைக்களம் எட்டியுள்ளது.

இதனை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து மரண தண்டனை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவர்கள் சிறைச்சாலை கூரைமீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் மற்றும் சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளின் பெயரை பரிந்துரைப்பதைத் தவிர்க்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

No comments: