திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது - இராஜாங்க அமைச்சர்


நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு, கொரோனா கட்டுப்பட்டு நிலையம் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் சில பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதிங்கட்கிழமை முதல் அந்த சேவைகளும் இடம்பெறாது என கூறினார்.


மேலும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments: