மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும்!


கடந்த 3 நாட்களில் பொதுமக்களின் நடத்தை திருப்திகரமாக இருக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே எதிர்வரும் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கட்டுப்பாடுகள் மேலும் நீக்கப்படும் என்பதால், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் அதே வேளையில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் நாளாந்தம் 2000 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போதும் அடையாளம் கணபட்டுவரும் நிலையில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டார்.

No comments: