நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவில்லை - மஹிந்த அமரவீர


எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு வாழ்க்கைச் செலவுக் குழு எடுத்த முடிவே அன்றி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எனவே அவருக்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள அதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரித்த காரணத்தினாலேயே அரசாங்கம் இந்த முடிவை மிகுந்த தயக்கத்துடன் எடுத்தது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை எரிவாயு போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருக்க அமைச்சரவை உபகுழு தீர்மானித்திருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

No comments: