ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது !


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020 நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்தது.

கடும் இழுபறிக்கு மத்தியில் கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நியமனத்திற்காக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்டுள்ளது.

No comments: