சுதந்திர வர்த்தக ஒப்பந்ததிற்கு பிரித்தானியா - அவுஸ்ரேலியா இணக்கம்


பிரெக்ஸிற்க்குப் பின்னரான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததிற்கு பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதிதாக பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, காலநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை கட்டியெழுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையிலான உறவில் புதிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்வதற்கான வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் தமது நாட்டுக்குக் கிட்டியுள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: