கடும் நிபந்தனைகளின் கீழ் சானி அபேசேகர பிணையில் விடுதலை


கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் சானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் உட்பட எட்டு சந்தேகர்கள் தொடர்பான சாட்சியங்களை சோடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் பிணை வழங்குவதற்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இரண்டு திருத்த விண்ணப்பங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது சந்தேக நபர்களின் கடவுசீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மேலும் நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

No comments: