மேற்கத்திய நாடுகளும் சேதனப் பசளை விவசாயத்திற்கு ஆதரவு - ஜனாதிபதி


சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.


அவர்களும் முன்னெடுத்துள்ள குறித்த திட்டத்தில் தாக்கம் ஏற்படும் என்பதனால் குறித்த நாடுகளும் சேதனப் பசளை திட்டத்திற்கும் ஆதரவை தெரிவிக்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் சில அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.


மேலும் இந்த பருவத்திற்கான உரங்களின் பற்றாக்குறை குறித்து பிரச்சினையில் தலையிட்டு தீர்வை காணவேண்டும் என ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதேவேளை சேதனப் பசளை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான தனது முடிவை மாற்றியமைக்க போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: