அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டம்


அம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


நேற்று இரவு, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதில் சம்மாந்துறை, கல்முனை மற்றும் சாய்ந்தமருது போன்ற  பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.


எரிபொருள் விலையேற்றம், அரசி விலை, உரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக இந்த மக்கள் கோஷங்களை எழுப்பினர்.


"விலையை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே", "அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்" போன்ற கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: