பொருளாதாரத்தை நிர்வகிக்க கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் - எரிபொருள் சர்ச்சை தொடர்பாக அரசாங்கம்


எரிபொருள் விலை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கள் வெவ்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் முழு பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகவும் கடினமான முடிவுகள் கூட எடுக்கப்பட வேண்டி ஏற்படும் என்றும் கூறினார்.

அதன்படி எரிபொருள் விலை உயர்வு என்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

எனவே, மக்களின் நலன்களுக்காக இல்லாத சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் இது ஒரு கடினமான முடிவாக தான் கருதுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல  சுட்டிக்காட்டினார்.

No comments: