எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி : பேக்கரி பொருட்களின் விலையும் உயர்வு


சமீபத்திய எரிபொருள் உயர்வுக்கு ஏற்ப பாண் தவிர்ந்த அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்ட்டது என அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: