யாழ். மாவட்டத்தில் இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை - அரச அதிபர்


யாழ். மாவட்டத்தில் இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை என்பதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பயணத்தடை  தளர்த்தப்படும் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு முதற்கட்டமாக  71 ஆயிரத்து 712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

No comments: