தேங்காய்க்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை இரத்து !!


தேங்காய் ஒன்றிற்கான அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காயை 70 ரூபாய்க்கும் 12 முதல் 13 அங்குலம் வரையான தேங்காயை 65 ரூபாய்க்கும் 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காயை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்ய கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலை தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (19) அறிவித்துள்ளது.

No comments: