இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம் என்கின்றார் இராணுவ தளபதி


நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என் பது குறித்து நாளை (18) தீர்மானிக்கப்படு என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நாளை இடம்பெறும் சந்திப்பின்போது நாட்டின் நிலைமை தொடர்பாக ஆராஜப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள், திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படம் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் பயணக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: