50 மடங்கு வேகத்தில் பரவக்கூடிய புதிய வகை கொரோனா கொழும்பில் அடையாளம் - மக்களே எச்சரிக்கை


இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் பரவிவரும் B.117 கொவிட் திரிபை விடவும் குறித்த திரிபு 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு 09ல் இருந்து பெறப்பட்ட 5 மாதிரிகளிலும் டெல்டா (பி .1.617.2 / இந்திய மாறுபாடு) கண்டறியப்பட்டது.

கராபிட்டி, மட்டக்களப்பு, கொழும்பு 06, கொழும்பு 08, மற்றும் கொழும்பு 10 ஆகியவற்றில் B.1.1.7 (ஆல்பா / யுகே மாறுபாடு) கண்டறியப்பட்டது.

No comments: