தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா இல்லையா? – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை


தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு கடந்த மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தற்போது, தொற்று குறைவடைந்துள்ள 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

மேலும் தொற்று அதிகமாகவுள்ள 11 மாவட்டங்களில் மாத்திரம் மேலதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளமையினால்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் இன்று முற்பகல் ஆலோசனை நடத்தவுள்ளார்.

No comments: