மதுபங்களை பெற்றுக்கொள்ள அனுமதி - காலால் திணைக்களம்


ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக காலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் சீல்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில பல்பொருள் அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா  கட்டுப்பட்டு செயலணியினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: