பசிலின் நாடாளுமன்ற வருகை குறித்து முடிவு எட்டப்படவில்லை - கெஹலிய


பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது மற்றும் அமைச்சராக பதவியேற்பது குறித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (29) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.


அவர் நாடாளுமன்றதிற்கு நுழைவது தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.


அவற்று முடிவு எட்டப்படும் சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ஷ வின் நாடாளுமன்ற பிரவேசம் குறித்து அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

No comments: