இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று


இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகவுள்ளது.


சுற்றுலா இலங்கை அணியானது டி-20 தொடரை முற்றாக இழந்துள்ள நிலையில் இன்றைய தினம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.


அதன்படி ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.


குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, துணைத் தலைவரான குசல் மெண்டீஸ், விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரை இழந்துள்ளது.


அவர்கள் மூவரும் ஹேட்டால் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியுள்ள காரணத்தினால் இலங்கை கிரிக்கெட்டால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அதேநேரம் இந்த மூன்று வீரர்களைத் தவிர அவிஷ்க பெர்னாண்டோவும் காயம் காரணமாக விளையாடுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

No comments: