இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மாற்றம் - ஜோ பைடன் பரிந்துரை


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கை பரிந்துரை செய்துள்ளார்.

ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராக இருந்த ஜூலி சங், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான பதில் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.

இதேவேளை அவர், கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும், தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் ஜூலி சங் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் குறித்த பரிந்துரையை செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் நியமிக்கப்படுவார்.

தற்போது அமெரிக்க தூதுவராக 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் அலைனா டெப்லிட்ஸ் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: