துமிந்தவின் விடுதலையில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என சுமந்திரன் குற்றச்சாட்டு


துமிந்த சில்வா விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியான விடயம் என்றாலும் ஏனைய அரசியல் கைதிகளை ஏன் அரசாங்கம் விடுதலை செய்யவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.


இதேவேளை மரணத் தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்தமையானது கண்டனத்துக்குரிய விடயம் என்றும் இந்த செயற்பாடு நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

No comments: