கோட்டாபய அரசு தமிழர்களை ஏமாற்றாது - தினேஷ் குணவர்தன


கடந்த நல்லாட்சி அரசே தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது என்றும் கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் அதீத அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


துமிந்த சில்வாவின் விடுதலையை மூடி மறைப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்ற எதிரணியினரின் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.


மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முதல் சமிக்ஞையாகவே தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இதேவேளை சிறையிலுள்ள ஏனைய அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

No comments: