ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருக்கின்றேன்: மௌனம் கலைந்த ரவி கருணாநாயக்க!


ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தாம் தொடர்ந்தும் அங்கம் வகித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான சர்ச்சை காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க கடந்த தேர்தலில் இருந்து எவ்வித அரசியல் கருத்துக்களையும் வெளியிடவில்லை.


எனவே அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியுள்ளதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.


எனினும், தாம் செய்ற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்கவை ஓரம் கட்டுவதில் சிலர் காட்டிய முனைப்பு தமது எதிர்த்தரப்பினரை விரட்டுவதற்கு காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். (DM)

No comments: