குசால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லவை இலங்கைக்கு திரும்ப அனுப்ப தீர்மானம்


(bio-bubble) நடைமுறைகளை மீறியமைக்காக குசால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து T20 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

 

No comments: