நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை நீடிக்கப்படலாம் - அரசாங்கம்


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் சூழ்நிலைகளை மதிப்பேசு செய்து அதற்கமைவாகவே பயணத் தடையை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் ஏன அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், ஜூன் 21ஆம் திகதி பயணத் தடையை நீக்குவது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி கட்டுப்பாட்டை நீக்குவதா இல்லையா என்ற முடிவு அனைத்து விடயங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் நாட்டைத் திறப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அடுத்த சில நாட்களில் வாய்ப்புகள் சாதகமாக மாறினால், சாதகமான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

No comments: