புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை மாலை நான்கு மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகைய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
