அமைச்சராக பதவியேற்பது தொடர்பான செய்திகள் பொய்யானவை - முன்னாள் ஜனாதிபதி


அமைச்சராக தான் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.


இன்று (28) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி குறித்த செய்திகளுக்கு  மறுப்பு தெரிவித்துள்ளார்.


அத்தோடு தான் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிகளுக்காக அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த அரசாங்கத்தில் எந்தவொரு பதவியாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்வார்கள் என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: