சுவீடன் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி உக்ரைன் அணி வெற்றி!


யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு 16 ஆவது சுற்றுப் போட்டியில் சுவீடன் அணியை வீழ்த்தி உக்ரைன் அணி வெற்றிபெற்றுள்ளது.


ஸ்கொட்லாந்தின் ஹம்ப்டன் பார்க் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் கோல்களை புகுத்தி வெற்றிபெற்றது.


குறித்த போட்டி ஆரம்பமாகி 27 ஆவது நிமிடத்தில் உக்ரைன் அணி வீரர் ஒலெக்சாண்டர் ஜிஞ்சென்கா முதலாவது கோலை அடித்தார்.


இதனை தொடர்ந்து பதிலுக்கு சுவீடன் அணி வீரர் எமில் போர்ஸ்பெர்க் அணிக்காக ஒரு கோலை அடிக்க, ஒதுக்கப்பட்ட மேலதிக நேரத்தில் 99 ஆவது நிமிடத்தில் சுவீடன் அணி வீரர் மார்கஸ் டேனியல்சன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


பின்னர் 120 ஆவது நிமிடத்தில் அர்டெம் டோவ்பிக் மற்றுமொரு கோலை அடிக்க உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.


எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெரும் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் உக்ரைன் அணி மோதவுள்ளது.

No comments: