பசிலுக்காக இராஜினாமா என்பதில் உண்மையில்லை - ரஞ்சித் பண்டார


பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை ஆளும்கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மறுத்துள்ளார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக எவ்வித முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ, ஜூலை 6 ஆம் திகதி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியிருந்தன.

அரசியலமைப்பின் 20 வது திருத்ததின்படி இரட்டை பிராஜவுரிமை கொண்ட ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ  2010 முதல் 2015 வரை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: