கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு - விபரம் இதோ


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதனை அடுத்து நாட்டில் பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர்களின் 26 ஆண்களும் 21 பெண்களும் உள்ளடங்குவதுடன் அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இன்று இதுவரை 1180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 289,153 ஆக உயர்ந்துள்ளது.

No comments: