டயகம சிறுமி மரணம் - பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ரிஷாட்டின் மைத்துனர் மனைவி உட்பட மூவர் கைது!
ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளன நிலையில் ஜூலை 03 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்திருந்தார்.
சிறுமியின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை, அவர் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்த குறித்த சிறுமியை ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44 வயது) பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய நேற்று பொரளை பொலிஸார் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இதனை அடுத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
